Monday, November 28, 2011

மயக்கம் என்ன - திரைப்படத்தை முன்வைத்து ...

mayakkam enna review

         




       
                       விக்ரமன்தனத்திலிருந்து பாலகுமாரன் டோனுக்கு மாறியவர்கள் வரிசையில் ஷங்கர் முதல் செல்வராகவன் வரை தனி வரிசை உண்டு. பாலுமகேந்திராவின் பிரதாப் போத்தன் (டிஸார்டர்) ஷேடில் தனுஷ் உலவும் கதா பாத்திரங்கள் செல்வராகவனின் செல்ப்-இல் இருந்து நவீனப் பட்டுக் கொண்டன .காதலின் புனித அபத்த தொலிக்குள் இருக்கும் காமத்தின் திமிறலை மந்த மாருதத்தில் வாழ்வின் மலையினுச்சி மீதில் இருந்து உரக்க அறைகூவும் நாயகனின் தலைகோதி சாலப் பரிந்து ஊட்டும் தி.ஜாவின் யமுனாவுக்கு சுடிதார் போட்டு 7ஜி ரெயின்போ காலனி நாயகியாகவும் ,பாலகுமாரனின் அகல்யாக்களும் நாராயணிகளும் பிசைந்த சுடர் மிகும் அறிவை படைத்து விட்டாய் என கதறும் குரலோடு, தீநடம் புரியும் ஜி.டி நாயுடுகளுக்கு தம் தடம் அறிவதற்கு முன்னம் தாபசாந்தி செய்ய சிநேகாக்களோ ,சோனியாக்களோ ,ரிச்சாவோ அடர்மஞ்சள் நிறத்தில்  தயாராய் இருக்கிறார்கள்.ட்ரையாலஜி என்று வகைப்படுத்திக் கொள்ள ஏதுவாய் இருக்கிறது திரைத்துறை விஞ்ஞானிகளுக்கு

ஒரு உதவி இயக்குனன் - நண்பன் கூற்றுப்படி தன் வாழ்வை தொடர்ந்து திரையில் பேச  முடிந்திருக்கிறது செல்வராகவனுக்கு .ஒரு பெண்ணுக்கான தாபம், இரண்டு பெண்களிடையே ஊசலாட்ட அலைவு, இன்று திரையில் காதல்  மணம் புரியும் தன் பிம்பமாக வைத்திருக்கும் தனுஷ்,மனைவிக்கு சொல்லும் சேதி அல்லது இறைஞ்சுதல் .. என்று சுவாரஸ்யமாய் புனைந்து கொள்ள முடிகிற விர்ச்சுவல் பிம்பம் புன்னகையோடே கடக்க வைக்கிறது .


சிட்டி ஆப் காட் - புதுப்பேட்டை,ஆயிரத்தில் ஒருவன் போன்ற ட்ரெசர் ஹண்ட் மித்தாலஜிகல் ப்ளேயில் இருக்கும் சுயம் கடந்து   நாயகியின் மரணம் ,நாயகனுக்கு பித்து பிடித்தல் , சிசுவின் சிதைவு இவற்றை சுற்றி பின்னப்படும் சம்பவங்கள் .இதுவே தொடர்ந்து வரும் பிம்பங்கள். செல்வராகவனின் படங்களில் பெரும்பாலும் வனங்கள் மற்றும் வனம் சார்ந்த பிரதேசங்களில் அல்லது விடுதி அறையில் நிகழ்த்தப் பெறுவதாய் இருக்கிறது கூடல்/முதல் தீண்டல் .(மனசு ரெண்டும் பார்க்க,ஜனவரி மாதம்,துள்ளுவதோ இளமையின் கூடல்,மயக்கமென்ன  விடுதி அறை காட்சிகள்/தேனிலவு கால விடுதி அறை )
அகவாழ்விற்கான இடப் பெயர்வு மற்றும்  திருந்திய குமாரனின் கேளிக்கை வெளி என்றும் வகைப் படுத்தக் கூடும். 

துள்ளுவதோ இளமையின் அவுட் ஆப் லைப் பயணம் ,மீட்சி .ஆயிரத்தில் ஒருவனின் பேண்டசி பயணம் .காதல் கொண்டேனின் (இனா,வ.வ.பூக்கள் ஸ்டைல்) வனக் குகை ஒத்த தனி வீடு . முதலியவை நினைவில் வருபவை

சின்ன வீடு ,இரண்டு மனைவிகள் என்னும் சாமான்யனின் பேண்டசிகளை பாலச்சந்தரின்(இருகோடுகள் துவங்கி எத்தனை படங்கள் ) அடியொற்றி பாக்யராஜும் பாலு மகேந்திராவும் (முந்தானை முடிச்சு,சின்ன வீடு,இரட்டைவால் குருவி ,மறுபடியும் ) சலிக்க சலிக்க எடுத்த பிறகு செல்வராகவனுக்கு வாய்த்திருப்பது நண்பனின் காதலி/மனைவி என்னும் பேண்டசி (?) ட்ராக் .கா.கொ துவங்கி பு.பே சோனியா அகர்வால் கடந்து ம.எ.ரிச்சா வரை .(செல்வராகவன் கதை எழுதிய யா.நீ.மோ -விலும் )



எப்படியேனும்  ஒரு கழிவறை சார்ந்த ஒரு காட்சி/உரையாடல் இடம்பெற்று விடுவதும் தற்செயலானதல்ல என்றே தோன்றுகிறது.முதல் படத்தில் இருந்து கா.கொ. கல் அடையாளம் வைப்பது, 7ஜியில் போஸ்டர்களை அலங்கரித்த மேற்கத்திய பாணி கழிவறை சித்திரம் .ஆ.ஒ-னிலும் காட்டுப் பயணத்தில் ஓர் உரையாடல் ,ம.எ வில் ஒரு காட்சி மற்றும் சொல்லாடல்.(செல்வராகவன் கதை எழுதிய யா.நீ.மோ -விலும் )

நெருப்பு /மழை நடனம் ,புறக்கணிக்கும் ஆசிரியர்கள்/மேலாளர்கள்/தகப்பன்மார்களின் வசையில் முண்டம்/முண்டக் கலப்பை (து.இ-தலைவாசல் விஜய்,கா.கொ-டஸ்டர் எறியும் ஆசிரியர்,யா.நீ.மோ ரகுவரன்,7ஜி- விஜயன்,ம.எ.வில் தனுஷ்)வெறித்த கண்களுடன் ஒரு பாடல் /காட்சி,சட்டை அல்லது சுடிதார் டாப்ஸ் மட்டும் போட்டுக் கொண்டு ஒரு காட்சி உறுதி(பாலுமகேந்திரா வினோதினி துவங்கி ரோகிணி,மணிரத்னத்தின் மதுபாலா வரை பயன்படுத்திய உத்தி) ,நாயகனின் நோக்காடு அல்லது நோய்க்காலத்தில் மருந்திடும்/கவனிக்கும் ஒரு காட்சி ,நாயகணைத் தவிர மொத்த உலகமும் வாகனங்களாய் /சாலை மாந்தர்களாய் விரையும் ஒரு ஷாட், கண்டிப்பாய் ஒரு மொட்டைமாடித் துயர நிகழ்வு/புலம்பல் காட்சி ,விஜய குமார், நாகேஷ்,நண்பனின் தகப்பன் என்று கலாச்சாரப் பாலம் கேரக்டர் ஒன்று,
தாடியுடன் கோணல் நடை நடக்கும் மங்கிய நிறத்தில் மட்டும் உடுத்தும் நாயகன் காஸ்ட்யூம்,எழ மறுத்து மீண்டும் போர்த்தும் ஒரு போர்வை , விரல்கள் தீண்டும் பேருந்து காட்சியை மூன்று படங்களோடு விட்டு விட்டது பெரும் மகிழ்ச்சி. நிச்சயமாய் ஒரு அழும் நைட்டித் தங்கை,நாயகன் நாயகி அணுக்கமாக கூடவே இருக்கும் அப்பாவிக் காதலனுடன் ஒரு தியேட்டர் சீக்வன்ஸ் ,நாயகனுக்கு நாயகி கையால் ஒரு அறை,மாதவிடாய் பஞ்சு ,கண்ணாடி நாயகன்....


மேலும் சொல்ல வேண்டியது இதுவரை கதையோடு கதையாய் அழுத்தமாய் இருந்த பல விஷயங்கள் மயக்கம் என்ன திரைப்படத்தில்.வெளிறியும் அதன் தேய் நிலை விளிம்புகளில் தொற்றியவாறும் காட்சியுற்றிருக்கின்றன. இசையும் ஒளிப்பதிவும் வசனங்களும் எப்போதும் போல் செல்வராகவனின் நாயகிகளைப் போல் தேவதைத்தனத்தின் சாயல்களுடன் மோகினிகளின் புன்னகையுடனும் ,செல்வராகவன் தன் சதுரங்க காய்களின் நகர்வை ஒரு இடைவெளிக்குப் பின் ப்ரெஷ்ஷாக துவங்கலாம் என்பதை சொல்லத் தோன்றுகிறது, இன்றைய நடுத்தர வயது ஆண்களின் ரகசியப் பக்கங்களின் ஏதோ ஒரு நொடியை ஏதேனும் ஒரு காட்சியாய் காணமுடிகிற கதைக்காரன் என்ற வகையில்.


9 comments:

க ரா said...

இப்பத்தான் பாக்க ஆரம்பிச்சுருக்கேன்..

சாம்ராஜ்ய ப்ரியன் said...

சூப்பர்!!

காவேரிகணேஷ் said...

இன்றைய நடுத்தர வயது ஆண்களின் ரகசியப் பக்கங்களின் ஏதோ ஒரு நொடியை ஏதேனும் ஒரு காட்சியாய் காணமுடிகிற கதைக்காரன் என்ற வகையில்.


இந்த எண்ணம் தான் என் மனதில் படம் பார்த்து 24 மணிநேரம் கழித்தும் ஓடி கொண்டிருக்கிறது. நேசன், வாழ்த்துக்கள்..

இரசிகை said...

mithran sir...kku kovam vanthurucho??

:)

அணிமா said...

நண்பரே அருமையான விமர்சனம்!!!!

அணிமா said...

நண்பரே அருமையான விமர்சனம்!!!

நேசமித்ரன் said...

நன்றிகள் இராம்ஸ்,பார்த்துட்டு சொல்லுங்க :)

சாம்ராஜ்ய பிரியன் நன்றிகள்

கணேஷ் நன்றிகள் தலைவரே :)

ரசிகை , கோபம்லாம் இல்ல ,நல்ல கலைஞன் மீதான தோழமை பாவம்

நன்றிகள் :)

அணிமா, நன்றிகள் தலைவரே!

ஓலை said...

Muthal paththi konangi sir saayal!

Selvaraagavan padangalai thodarnthu vanthirukkeenga polirukku.

sakthi said...

விமர்சனத்தை இப்படி கூட எழுத முடியுமா என யோசிக்கிறேன் ????