Thursday, November 24, 2011

கண்ணாடியறையில் பரவும் இசை


ஒரு புதிய மருத்துவனிடம்
உடல் திறப்பதாய்
இப்பொற்கொல்லன் சுத்தியல்
உள்ளிருந்து
யாரை செதுக்குகிறது
இத்தழுவலில் ...
கடிகார சர்ப்பத்தின்
வெட்டுப் பட்ட நாவுடன்

நரைக்கும் அந்தரங்கமிழைந்து
ஓரினப் புணர்வில் 
மின்விசிறிக் கவச நிழல் படர்தல்,
புதிதாய் குடியேறிய வீட்டில்
வளர்ப்புப் பிராணி தன் இடத்தை
தேர்ந்து கொள்வது

பிக்செல் சம்போகம்
குற்றியுலுகர ஸ்மைலியில் 
மோனோபஸ் வெற்றிடம் விரவி
லுகீமிய உதடுகளுடன்
ஒரு டாட்டூவை (த்)தின்னர் திரவத்தால் 
அழிப்பது 

கேளிக்கைப் பூங்காவின் ப்ளாஸ்டிக் 
வில்லைகள் நிரம்பும் ஸ்கலிதப் பை ,
ஞாபகக் கருந்துளை பெருக
ஒரு பிரேதத்தை புதைத்தபின்
குளிப்பது

முடுக்கப்படும் 
கலவி தோற்ற பெண்ணின்
 ஸ்கூட்டி கைப்பிடி
உதிரங்கீறி எழுதும் பியர் புட்டி
கழுத்து ,
தாமதமாய் தத்தெடுத்த குழந்தையை
இனிசியலுக்குப் பழக்குவது

கடிகார சர்ப்பத்தின்
வெட்டுப்படாத நாவுடன்

2 comments:

இரசிகை said...

....

yaaraavathu vilakkam koduthaal nalam.

rajasundararajan said...

//புதிதாய் குடியேறிய வீட்டில்
வளர்ப்புப் பிராணி தன் இடத்தை
தேர்ந்து கொள்வது//

//ஒரு டாட்டூவை (த்)தின்னர் திரவத்தால்
அழிப்பது//

//ஒரு பிரேதத்தப் புதைத்தபின்
குளிப்பது//

//தாமதமாய்த் தத்தெடுத்த குழந்தையை
இனிசியலுக்குப் பழக்குவது//

இவையெல்லாம் உலக நடப்புகள்தாமே? மாறுதலும் மாற்றிக்கொள்ளுதலும்.

'கண்ணாடியறையில் பரவும் இசை' கசிகிறதில்லை.

இதற்குமேல் விளக்கிக் கெடுக்கவேண்டா (பீர் பாட்டில் கிட்டாத பெண்???... இன்னொன்றைத் தேர்ந்துகொள்வோம் இல்லையா, அப்படி!)

என்று அமைகிறேன். பிறகும் இது எனது புரிதல், அவ்வளவே.

//கடிகார சர்ப்பத்தின் வெட்டுப்பட்ட / வெட்டுப்படாத நாவு// இதில் இது 'பிளவுபட்ட / படாத'; //மோனோபாஸ்// இது 'மெனோபாஸ்' என்றிருக்க வேண்டுமோ என்று ஐயம்.

'நேசமித்ரன் கவிதைகள்' தளப் பின்னோவியம் காரணம் எழுத்துகள் வாசிக்கமுடியவில்லை. கவிஞர் எங்களைப் போல் கண்ணடி போட்டவர்களையும் கணக்கில் எடுப்பின் நன்றியுடையவர்கள் ஆவோம். அல்லது அதுவும் கவிதை போலவே எங்கள் உழைப்பைக் கோர வேண்டும் என்பதே உட்கிடை என்றால் இருந்துவிட்டுப் போகட்டும்.