தூக்குக் கைதியின் முகமறைப்பாய்
மின்கம்பி காகத்தின் பிரேதம்
இறுதியென அறிந்துப் புணர்ந்தவள்
விட்டுச் சென்ற கைக்குட்டை
மிருதங்க குளவியின்
கூட்டைப் பிரித்தலாய்
அடிவயிற்றில் கரமழுத்திய
அழுத முகம்
அரவமற்ற குளத்தில்
நிழலின் கீழ் சேரும் மீன்குஞ்சுகள்
வளையலுக்கு சங்கை அறுக்கும்
விரல்களுக்குப் புரிவதில்லை
குடலேறிய சிசுவின் விழித்திரள்
வாட்டிய பறையின் கருமை
கோளந்தாழும் இடைத்தடம்
ஒரு கண்ணால் மோதிக் கடக்கும்
துருவக் கடல்
ஞாபகம் குடித்து
நெருப்புமிழ்பவன் முத்தச் சிதை
கல் விழுங்கும் பறவை
மாரி ஒட்டிய சிறகு நடுங்க
மிழற்றும்
மாசு தொங்கும் மரத்தில்
அசையுமொரு கீற்றுப்பொட்டலம்

2 comments:
இவறல் = selfish, shifty, மிழற்று = hum, murmur
தூக்குக் கைதி = man to be hanged, முகமறைப்பு = cloth used to cover the face, மின்கம்பி = electric cable, காகம் = crow, பிரேதம் = corpse, இறுதி = final, அறிந்து = knowing, புணர்ந்தவள் = she who copulated, விட்டுச்சென்ற = put behind, கைக்குட்டை = kerchief;
மிருதங்கம் = a narrowly double ended cylindrical drum, குளவி = wasp, கூடு = cocoon, பிரித்தல் = undo, அடிவயிறு = abdomen, கரம் = hand, அழுத்திய = pressed, அழுத முகம் = weeping face, அரவமற்ற = undisturbed, குளம் = pond, நிழல் = shade, கீழ் = under, சேரும் = assembled, மீன்குஞ்சுகள் = fingerlings;
வளையல் = bangle, சங்கு = conch, அறுக்கும் = cutting, விரல்கள் = fingers, புரிவது = comprehend, குடலேறிய = conceived, சிசு = fetus, விழித்திரள் = forming eye;
வாட்டிய = warmed-up, பறை = a flat drum, கருமை = black(dark)ness, கோளம் = orb தாழும் = descent, இடைத்தடம் = mid-mark, ஒரு = one, கண் = eye, மோதி = hit, dash, கடக்கும் = traverse, துருவக் கடல் = polar sea, ஞாபகம் = memory, குடித்து = drank, நெருப்பு= fire, உமிழ்பவன் = he who spew out, முத்தம் = kiss, சிதை = pyre;
கல் = pebble, விழுங்கும் = swallow, பறவை = bird, மாரி = rain, ஒட்டிய = adhered, சிறகு = wing, நடுங்க = shiver, மிழற்று = hum, murmur, மாசு = waste, தொங்கு = hang, மரம் = tree, அசையும் = shake, waver, கீற்று = palm leaf, பொட்டலம் = parcel, pocket.
எனக்குத் தெரிந்த அளவுக்கு அரும்பொருள் கூறியிருக்கிறேன். (இதெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த பொருள்தான் இல்லையா?) கவிதைக்குப் பொருள் கூறுங்கள் யாராவது!
so...
mithran sir thaan vilakkam sollanum.
:)
Post a Comment