Thursday, November 17, 2011

வவ்வாலின் விழிப்பில் புல் பொழிகிறது


மயிற்பீலிகளின் புத்தக அடை
டங்ஸ்டன் கனவுச் சூட்டோடு...
ஸ்வெட்டர் தைத்துக் கொண்டிருக்கிறது
கிழக்கு கடற்கரைச் சாலை
சூரியன்


காந்தாரி தேவதையின்
சீசாப் பலகைத் தராசில்
விளம்பர இடை
-வேளைக் காகங்களின் எச்சம்
தாழிகளில் கிட்டும் மாண்டோருக்கான
உண்டிக் கலயம் பழித்து



அடுக்கப் பட்ட கண்களுடன்
தட்டான்களின் புணர்வுச் சித்திரம்
கனாப் படுகைகள்

வளர்ப்புக் காளான்களின்
எரு மட்கும் காத்திருப்பொத்து
இடுகாட்டின் மேடழிய மேடழிய
மேடுகள்


ஆய்வுமேசைகளின் தவளை இயேசு,
பொத்தானுக்கு நீளும் எரியூட்டியின்
செருமும் நாவுக்கு சுவை கூட்டுகிறார்
நோயற்ற உடலங்களால்



வவ்வாலின் விழிப்பில்
புல் பொழிகிறது

0 comments: