Saturday, October 22, 2011

தாவரப் பிடாரன்


பழக்கிய தூதுப் பறவையின்
கால்நகமென சுமந்து
பிரசவத்திற்கு
திறந்திருக்கும் உடலாய்ப்
பிறை

தோரியக் கடல் நிலத்தில்
ஏலியன்கள் குழும
திமிங்கலத்தின் நூற்றாண்டு
பிரேதம்

ஆதிச்சீனத்து மை பிலிற்றிக் கல்
தொட்டு சன்னதப் பெண்
பேசுகிறாள் ஈழ மலையகச்
சிறுதெய்வத்தின் குரலில்


ளி
மலி வெப்காம் மேனியர்தம்
கலைடாஸ்கோப் பிம்பங்களின்
சூரியக் கருந்துளைக் குருடு
சிந்திய
விந்து வங்கியின் கழிவறை
நீலவிதைகளின் தோலுரித்த
நளிருடல்

கூண்டில் பிறந்த புலியின் 
நினைவில் எந்த காடிருக்கும் 

6 comments:

இரசிகை said...

vaasiththuvitten..

purinjuthaannu mattum kekkaatheenga..:)


//
பழக்கிய தூதுப் பறவையின்
கால்நகமென சுமந்து
பிரசவத்திற்கு
திறந்திருக்கும் உடலாய்ப்
பிறை
//

//
கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும்
//

but,ivvarikal pidiththiruntha.

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

Nundhaa said...

இதுவும்

//

பழக்கிய தூதுப் பறவையின்
கால்நகமென சுமந்து
பிரசவத்திற்கு
திறந்திருக்கும் உடலாய்ப்
பிறை

//

இதுவும்

//

கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும்

//

அருமை

ஹேமா said...

நேசன்...என்னமோ ஈழம் கவிதைன்னு சொல்றீங்க.கடைசி வரியைமட்டும் ஈழத்தோடு தொடர்பு படுத்தி விளங்கிக்கொண்டேன் !

சே.குமார் said...

//ஆதிச்சீனத்து மை பிலிற்றிக் கல்
தொட்டு சன்னதப் பெண்
பேசுகிறாள் ஈழ மலையகச்
சிறுதெய்வத்தின் குரலில்


ளி
மலி வெப்காம் மேனியர்தம்
கலைடாஸ்கோப் பிம்பங்களின்
சூரியக் கருந்துளைக் குருடு
சிந்திய
விந்து வங்கியின் கழிவறை
நீலவிதைகளின் தோலுரித்த
நளிருடல்

கூண்டில் பிறந்த புலியின்
நினைவில் எந்த காடிருக்கும் //


எல்லாமே பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்.
கடைசி வரிகள் அருமை.

D.R.Ashok said...

ரசித்த வரிகளை கூறிவிட்டார் நந்தா..

//விந்து வங்கியின் கழிவறை// இது reapeteda வந்துக்கொண்டிருக்கிறது .. கவ

அடர்த்தியை குறைத்துக்கொண்டது மாதிரி தெரிகிறது (எனக்கு அப்படி தெரிகிறதோ?)