தண்டவாள நடையில்
கர்ப்பம் குழைந்த முகில்
திசை தவறிய
பறவையைப் போல்
உறங்கப் பழகுகிறது
அழை மைய யுவதியின்
தானியங்கிப் பகல்
வளர்ப்பு பிராணிகளின்
சந்தையில்
கூண்டுகள் விற்பவன் கடவுள்
ரிமோட் தொலைந்த
பொம்மையின் ஆடைகளில்
எப்போதோ ஊட்டிய கேக்கின் கறை
பழுப்பு நகம் தடவும் பிரமாண
சங்கிலியின் துரு
நைந்து கிழிந்த ஆணுறை
விதையுள்ள கஞ்சாவை
புகைப்பதாய்
சப்தித்து திறக்கிறது
பண்டிகை நாளின் சாலை
கோடை கால ஞெலிகை
ஒத்து இரட்டைக் கரு
நெளியும் உடல்
நன்றி: அதீதம்

0 comments:
Post a Comment