Saturday, September 24, 2011

காதுகள் முளைக்கும் நிரை நிலம்


களவு இசைச்சுவடியை வாசித்தல்
நேயச் சடங்குகள்
நிகழும் குற்றம் துழாவிய
துகிலுடல்

வெற்று மது சீசாக்களின் மூட்டை
மிதக்கும் விவாகரத்தான ஆகாயம்
காதுகள் முளைக்கும் நிரை நிலம்

கிளையில் மழைக்கும் தொட்டிச்செடியின்
வேர்கள் கல்லறைக்குள் முளைத்தபடி
இருக்கும் நகச்சுருள்.,
வரிசையில்
தொப்புள் கொடி அடைத்த தாயத்தை
ஒத்ததும்

மன்னித்து உறைமீளும் ஆயுதம்
கணுச்சிதைந்து சாம்பலூதப் பெறும்
தன் சிமிழ் திறந்த மீளுரு

அழைப்பற்ற இரவொன்றின் புணர்வில் பிசுத்த
அவசர ஊர்தி படுக்கை
பகலில் காயமற்று மரித்த
கடைசிக் கசிவிலும்…

மேலும் , அல்லது
இரையின் குருதிக்கண்ணொளிர் சூரியனை
நக்குகிறது சர்க்கஸ் மிருகம்

வெளியேறும் எறும்புகளை முத்தமிட
எத்தனிக்கும் கவசக் கூண்டுடைத்த
கர்ணவுடலில்
தைத்த வான்காவின் காது
அல்லது டாவின்சிக் கோப்பை

(கவிஞர் வெய்யில் கொணர்ந்திருக்கும் கொம்பு சிற்றிதழில் வெளிவந்திருக்கும் கவிதை)

5 comments:

அகநாழிகை said...

அருமை நேசன்.

ஓலை said...

Arumai Nesan.

இரசிகை said...

//தொப்புள் கொடி அடைத்த தாயத்தை
ஒத்ததும்//

:)

muzhusaa puriyalaye...

சே.குமார் said...

//கிளையில் மழைக்கும் தொட்டிச்செடியின்
வேர்கள் கல்லறைக்குள் முளைத்தபடி
இருக்கும் நகச்சுருள்//

அண்ணா... கலக்கல். அருமையான கவிதை.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
மன்னித்து உறைமீளும் ஆயுதம்
கணுச்சிதைந்து சாம்பலூதப் பெறும்
தன் சிமிழ் திறந்த மீளுரு

//

அருமையான வரிகள்