Thursday, September 22, 2011

சென்ற கவிதைக்கு கவிஞர் ராஜ சுந்தராஜன் அவர்களின் கருத்துரையும் மொழிபெயர்ப்பும் ...

சென்ற கவிதையின் சுட்டி http://nesamithran.blogspot.com/2011/09/blog-post.html


கவிஞர்களாகப் பட்டவர்கள் வாசகர்கள் மீது இரக்கப்பட்டு எழுதக் கடமைப் பட்டவர்கள்.

இத்தனை பட்டால் கவிதை கலை ஆகுமா, கைவினை ஆகுமா என்று தயங்கலாம். கவிதையைப் புரிந்துகொள்ளும் வாசகர் வர இருப்பதோ அதற்கு அடுத்த தலைமுறையில். ஆனால் அங்கு கொண்டுசேர்க்கும் ஓரிரண்டு அஞ்சலாட்களை இத் தலைமுறையில் ஈர்க்க வேண்டியதும் தேவை. இல்லையென்றால் எழுதப்பட்டது வழக்கொழியும். இதற்காக, கவிஞர்கள் சற்று இளகி, இத் தலைமுறை அறிந்த இலக்கண மரபையும் சற்று இடைக்கலந்து எழுதினால் நல்லது.

நேசமித்திரனின், ‘மயில் கழுத்து விதைத் துளிர்’ என்னும் இக் கவிதையில் என்னை இடர்ப் படுத்துபவை:

1. ‘மயில் கழுத்து’. இது ‘மயிற் கழுத்து’ என்று வேற்றுமைத் தொகையாக எழுதப்பட்டால் என்ன குறைந்துவிடும். அல்ல, இது மயிலுடையதும் கழுத்துடையதும் என்று இரண்டுக்கும் தனிதனியாகப் பொருள்கூட்டப்பெற வேண்டும் என்றால், இப்படி இருப்பதே சரி. (கல் + தூண் = கற்றூண்; எள் + தித்திப்பு = எட்டித்திப்பு. ஆனால், இத்தகைய வல்லினச் சிக்கலில் இருந்து மட்டும் நாம் விடுபட்டு, ‘கல் தூண்’, ‘எள் தித்திப்பு’ என்று எழுதும் வழக்குக்கு வந்துவிட்டோம். இதிலும், மலையாளத்தில் போல, ‘கல்த்தூண்’ என்று வேற்றுமையைத் தொகுக்கலாம். ஆனால் மீரா (அல்லது அவர் அச்சகத்தில் ஒருவர்), நான் ‘கல்த்தூண்’ என்று எழுதி இருந்ததை, ‘கல் தூண்’ என்றே திருத்திப் பதிப்பித்தார்.)

2. ‘தோற்ற விந்தென’. இது ‘தோற்றத்து விந்தென’ என்று ‘அத்து’ சாரியை பெறவேண்டும் என்று எண்ணுகிறேன். அல்லென்கில், ‘தோல்வியுற்ற விந்தென’ என்றே பொருள்படும். அப்படி ஒரு பொருளையும் உள்ளித்தான் எழுதினேன் என்று கவிஞர் சொன்னால்? ஆளை விடுங்கள்.

3. ‘நீலவுடலிகள்’. இது ‘blue whales’ என்று இங்கு புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால், ‘blue bodies’ என்றோர், எனக்குப் பிடித்த. இசைக்கோவை இருக்கிறது. மருத்துவச் சொல்லாட்சியிலும் இது இருக்கிறது.

4. ‘துறவி நண்டு’. இது தொன்மம் சார்ந்தது என்று எண்ணுகிறேன். எனக்கு அவ்வளவாகத் தெளிவில்லை.

5. ‘மயிற்கழுத்து விதைத் துளிர்’. இது, தோடர்கள் (அதன் வழி இந்தியப் பொது)த் தொன்மத்தில் நாம் அறியவரும், அறிவியலுக்கு முரணான, ஆண்மயில் விந்து துளிப்பப் பெண்மயில் அதைப் பொறுக்கிச் சினையுரும் என்னும் கதை சார்ந்ததா என்று எனக்குத் தெளிவில்லை.

நேசமித்திரன் கவிதைகள், பொதுவாக, மணியொடு ஆங்கிலப் பவளம் மிடைந்து (இக் கவிதையில் அவ்வளவாக இல்லை) இயலும் ஆகையால் அதைப் புரிந்துகொள்ள நான் ஆங்கில மொழிமாற்றுக்குப் போவேன். இது ஒரு தொல்லையில்லையா? வேறு என்ன செய்ய? குதிரைக்கு வாக்கப்பட்டுவிட்டு ‘அது’க்குப் பயந்தால் ஆகுமா?

தாழே, என் புரிதல்:

PEACOCK NECK SEEDLING

Under the mustaches floating up
Evening sky,
Fascinated by the vilari tune,
The blue bodies
Suffer the harpoons.

His darling daughter spruces up
His stained undergarments;
Fanned by her other hand
Sleeps the divorced father.

With folds
Like a chest x-ray sketch,
Covers the curtain filled light.

From the Saintly Crab residing beak,
That has opened for its prey,
Distances
The snails infested mud of God

In the shifting
Of a boat, roped by
A picture of an embalmed snake,
Get stirred the star birds

As a decanter settled sperm,
Appears
The moon.

'விளரி' என்பது பொழுது மயங்கிய நேரத்து நெய்தல் யாழில் வரும் ஒரு பண். = 'தைவதம்' = 'A' என்றும் அடிக்குரல் இழையலாம்.

4 comments:

ரெவெரி said...

கவிஞர்களாகப் பட்டவர்கள் வாசகர்கள் மீது இரக்கப்பட்டு எழுதக் கடமைப் பட்டவர்கள்...

உண்மை...

ரெவெரி said...

நல்லதொரு கவிதை..மொழிபெயர்ப்பு..கருத்துரை...

சே.குமார் said...

நல்லதொரு கருத்துரை... அதை பிரசுரித்த உங்களுக்கு நன்றி

இரசிகை said...

iyavukku vanakkangal...