Sunday, May 22, 2011

இரண்டு கவிதைகள்

மற்றும்... ஃ

சீசாப் பலகையின் மையத்தில் வீழ்ந்த பூ
இன்னும் கிளை ஞாபகத்தில்...


பகடையின் எண்களற்ற முதுகின் கீழ்
வீட்டுப் பாடங்களேதுமற்ற சிலேட்டுள் 
உடல் சொடுக்குகிறது
மகவுண்ட மீன்

சொற்ப தானியங்களுடன் இறுதி நாள்
நுரைப்பஞ்சாய் சாயமுறுகிறது
வரிக்குதிரையின் கருவில் தோல்


பால்மத்திய ரேகையிலிருந்து கிளைக்கும்
நச்சுக் கொடியில் ள்,ன் மற்றும்
அல்லது ஆல்பா,பீட்டா ....


தூக்குக்கு தயார்படும் பரிசோதிக்கப் பெற்ற
உடல்நலத்துடன்..,
காலியாகும் இங்குபேட்டர்களில் இருந்து
ஒரு எளிய பகல்

செண்பக வனம் - சில குறிப்புகள்

மிருக செட்டைகளின் கீழ் நெளியும்
டங்ஸ்டன் புழுக்களின் ஆய்வுக் கூட மிதவைகள்
திமில் உடைந்து

வெயில் எண்ணிப் பார்க்கும் இலைகளின் 
பாவில் எச்சமிட்டு நட்சத்திரம் பொரிக்கும்
நாகக் கண் வாய்த்த நர்த்தகிக் கொண்டை பறவை

முதலுயிர் நுகர்ந்த பூமியின் பனிக்குட வாசம் பிலிற்றும் 
கடைசியுதிரம் உமிழும் மோனோபஸ் கருப்புதடுகள்
மிளிர சுனை

சமிக்ஞை மெல்லொலி இசைச் சிலந்தி உமிழும் ஒளியிழையில்
வனம் பாலிக்கும் ஏந்தியகரமாய் சிறகு விரித்து மூடும் வதிகுருகுகள்

பேறு காலப்புணர்வில் ஆண் திருடும் தனத்து மிடறாய் 
பாவாத பாதங்கள் தழுவ நீளும் கரங்களோடு 
அவள் நாசி முடிந்து பசியவாயில் வழிந்து 

அரப்பில் சிகைகழுவிய உகிர் ,இலை மேலொளிர் பகல்
யானும் 
பெய்யும் இருதுளியிடை தூரத்தில் 
எம்பாவையரும்

6 comments:

இரசிகை said...

marupadiyum varren......

ஹேமா said...

நேசன்....எப்பவும்போல !

D.R.Ashok said...

நறுமுகையே நறுமுகையே

இரண்டும் நன்று எனினும்... கிளையின் ஞாபக பூவும்
நட்சத்திர பொரிக்கும்
அரப்பும்
தாளகதி

ஓலை said...

Irendaavathu kavithai oru moodila irukku. Good.

விஜய் said...

'ஆண் திருடும் தனத்துமிடறாய்'

CLASS

Vijay

நேசமித்ரன் said...

ரசிகை .நன்றி .மீண்டும் வருக !


ஹேமா .உயிர்ப்போடு இருக்கிறேன் என்பது மகிழ்வு.நன்றி மக்கா!


அஷோக் நன்றி. பார்வை .ஞாபகத் திரள்.பிடித்தங்கள் :)

சேது.மிக்க நன்றி

விஜய். நன்றி :)